
சென்னை அமைந்தகரையில் பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 111-வது பிரம்மோற்சவ விழா கடந்த 10-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று காலை ரதா ரோஹணம் திருத்தேர் நிகழ்வு நடைபெற்றது. ரதா ரோஹணம் என்பது, தெய்வங்கள் திருத்தேரில் ஏறிச் செல்லும் விழாவாகும். இந்த திருத்தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தது சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. நாளை காலை பல்லக்கு வெண்ணெய்தாழி திருக்கோலம் நிகழ்வும், மாலை திருப்பாதஞ்சாடி நிகழ்வும், இரவு குதிரை வாகனம் வேடுபரி நிகழ்வும் நடக்கிறது. வரும் 20-ந் தேதி பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.