
திண்டுக்கல்,
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வருடம் முழுவதும் இதமான சீதோசனம் நிலவி வந்தாலும் கோடை சீசன் மற்றும் ஆப் சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கோடை சீசனில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி வருகிற 24-ந்தேதி தொடகும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மே 24ம் தேதி தொடங்கும் மலர் கண்காட்சி ஜூன் 1ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. மலர் கண்காட்சியுடன், கோடை விழாவும் துவங்கி நாய்கள் கண்காட்சி, படகு போட்டி, மீன்பிடித்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.