சென்னை: சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயரை முதல்வர் ஸ்டாலின் சூட்டினார்.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 'சென்னை, கொளத்தூர், பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இம்மருத்துவமனைக்கு 'பெரியார் அரசு மருத்துவமனை' என்று பெயர் சூட்டிட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இம்மருத்துவமனை விரைவில் தமிழ்நாடு முதல்வரால் திறந்து வைக்கப்படவுள்ளது.