![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/27/36044832-sexualassault1.webp)
சென்னை,
சென்னை பெரம்பூரை சேர்ந்த 12 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 24ம் தேதி மாலை தனது பள்ளி தோழியின் இல்ல விழாவுக்கு சென்று வருவதாகக் கூறி, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், சிறுமி வீடு திரும்பாத நிலையில், அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், சிறுமி மாயமானதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியின் செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து தேடினர். அப்போது, வீணஸ் நகரில் சிறுமி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிறுமியை மீட்பதற்காக போலீசார் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த இடத்தில் சிறுமி அவரது காதலனுடன் தனிமையில் தங்கியிருந்துள்ளார். அதேபோல, மேலும் 2 சிறுமிகள் அவர்களின் காதலர்களுடன் தங்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 3 சிறுமிகளையும் மீட்ட போலீசார், அவர்களை முத்தியால்பேட்டையில் உள்ள மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், சிறுவன் உள்பட 3 பேர் மீதும் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். கைதான கரிமுல்லா மீது 11 வழக்குகளும், அபிஷேக் மீது 6 வழக்குகளும், 16 வயது சிறுவன் மீது 6 வழக்குகளும் நிலுவையில் உள்ளது.