சென்னையில் பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

6 months ago 41
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வெள்ளத்திற்கு முன்பே தாழ்வான இடங்களில் வாழும் மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகளுக்கு மாணவர்கள் செல்வதை தடுக்க பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
Read Entire Article