
சென்னை,
சென்னையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மழைநீர் வடிகால் பணி காரணமாக உயரழுத்த மின்கம்பங்கள் இடமாற்றம் செய்ய வேண்டியுள்ளதால் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்: புழல்- ஜே.ஜே.நகர், ஆர்.ஆர்.குப்பம், தீர்க்கங்கரையான்பட்டு மற்றும் சோத்துப்பாக்கம் ரோடு.