சென்னை: சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேரும் இரானி கொள்ளையர்கள் என காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் கொள்ளையர்கள் பறித்துச் சென்ற செயின்கள் மீட்கப்பட்டுள்ளன. பிடிபட்ட கொள்ளையர்கள் மீது நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மக்களின் கவனத்தை திசை திருப்பி நகை பறிப்பில் ஈடுபடுவதே இரானி கொள்ளை. சென்னை செயின் பறிப்பில் உள்ளூர் நபர்களுக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்தார்.
The post சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேரும் இரானி கொள்ளையர்கள்: காவல் ஆணையர் அருண் விளக்கம் appeared first on Dinakaran.