சென்னையில் தேவாவின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

2 hours ago 2

சென்னை,

சென்னையில் தேவாவின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

"தேனிசை தென்றல் தேவாவின் இசை நிகழ்ச்சி 15.02.2025 அன்று சென்னை நந்தனம் ஒய்எம்.சி. மைதானத்தில் மதியம் 3 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் காரணமாக பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தோசிக்கப்பட்டுள்ளன.

மேற்படி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பார்வையாளர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் வாடகை வாகனங்கள் (மஞ்சள் பலகை வாகனங்கள்) செனடாப் சாலை/காந்திமண்டபம் சாலை, சேமியர்ஸ் சாலை, லோட்டஸ் காலணி 2வது தெரு (நந்தனம் எக்ஸ்டென்ஷன் வழியாக மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடையலாம்.

சைதாப்பேட்டையிலிருந்து வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வலதுப்பக்கம் வழியாகச் சென்று சேமியர்ஸ் சாலையில் "யு" டேர்ன் (வளைவு மூலம்) லோட்டஸ் காலனி வழியாக இலக்கை அடையலாம்.

அண்ணாசாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. பிரதான சாலை நுழைவு வாயிலில் விவிஐபி பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், மற்ற ஊகனங்களுக்கு அனுமதி இல்லை. அதேபோல், இந்நிகழ்ச்சிக்கு வரும் கலைஞர்களின் வாகனங்கள் காஸ்மோபாலிட்டன் கிளப்சாலை நுழைவுவாயில் வழியாக அனுமதிக்கப்படும்.

அண்ணாசாலையில் மதியம் இரண்டு மணிமுதல் வணிக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. இந்நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்கள் மெட்ரோ இரயில், மாநகர போக்குவரத்து பேருந்து மற்றும் மின்சார இரயில் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் மற்றும் நடைபாதையை பயன்படுத்தி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

Read Entire Article