சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - இசை ஆசிரியர் கைது

6 months ago 39

சென்னை,

சென்னை சாலிகிராமம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் மழைநீர் புகுந்ததால், தரை தளத்தில் வசிக்கும் குடும்பத்தினர் மாடியில் காலியாக இருக்கும் அறைக்கு சென்றுள்ளனர். அந்த அறையை அவர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அருகில் வசிக்கும் இசை ஆசிரியரான சுரேந்தர் என்பவர், அவர்கள் வீட்டில் இருந்த 11 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அடுத்த சில நிமிடங்களில் இசை ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக அழுதுகொண்டே சிறுமி தனது பெற்றோரிடம் ஓடி வந்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இசை ஆசிரியர் சுரேந்தர் மீது போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், சுரேந்தரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Read Entire Article