சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர்(காங்கிரஸ்) பேசுகையில், சட்டக் கல்லூரியை சென்னையிலேயே நிறுவுவதற்கு அரசிடம் ஏதேனும் திட்டம் இருக்கிறதா என கேட்டார். இதற்கு பதில் அளித்து சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசுகையில்6 ‘‘மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது ஒரு கமிஷன் நியமிக்கப்பட்டது. அந்தக் கமிஷனுடைய பரிந்துரையின் அடிப்படையிலே தான் பட்டறைப்பெரும்புதூர் மற்றும் புதுப்பாக்கம் ஆகிய இரண்டு இடங்களில் சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது.
சென்னையைப் பொறுத்தவரை, அந்த இடத்தை நாம் காலி செய்து உயர் நீதிமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டோம். எனவே, உயர் நீதிமன்றத்திடம் ஒப்படைத்த பிறகு அந்த இடத்தை நாம் திரும்பப் பெறுவது என்பதில் சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே, தேவையான இடம் கிடைக்குமேயானால், அந்தக் கமிஷனின் அறிக்கையை படித்துப் பார்த்து, சென்னையில் சட்டக் கல்லூரி துவக்குவதற்கான வழிகள் அதிலே இருக்குமானால், நிச்சயமாக, முதல்வரிடத்தில் எடுத்துச்சொல்லி, அந்த அறிக்கையை பொறுத்து, சென்னையிலே சட்டக் கல்லூரி கொண்டுவருவதற்கான வழிவகையை அரசு செய்யும்’’ என்றார்.
The post சென்னையில் சட்டக்கல்லூரி கொண்டு வரப்படுமா?: அமைச்சர் ரகுபதி விளக்கம் appeared first on Dinakaran.