சென்னையில் கிரிக்கெட் ரசிகர்களிடம் செல்போன்கள் திருட்டு: 8 பேர் கைது

1 day ago 3

சென்னை,

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கடந்த 28-ந் தேதி அன்று சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தை ரசிகர்கள் ஆர்வமாக பார்த்த சமயத்தில் பலரது செல்போன்கள் திருட்டுப்போய் உள்ளது. திருடப்பட்ட செல்போன் எண்ணில் உள்ள ஐ.எம்.இ.ஐ. எண் மூலம் அவர்கள் வேலூரில் உள்ள லாட்ஜில் தங்கி இருப்பதை கண்டறிந்த போலீசார் அவர்களை அதிரடியாக கைது செய்தனர்.

போலீசாரின் பிடியில் 8 பேர் சிக்கினார்கள். விசாரணையில் இவர்கள் ஜார்கண்ட் மற்றும் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 22), ஆகாஷ் நோநியா (23), விஷால் குமார் மாட்டோ (22), கோபிந்த் குமார் (21) என்பதும், மற்ற 4 பேர் சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது. இந்த கும்பலுக்கு ராஜ்குமார்தான் மூளையாக செயல்பட்டுள்ளார். இவர்களிடம் இருந்து 38 திருட்டு செல்போன்களை போலீசார் மீட்டனர். 

Read Entire Article