சென்னையில் ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து

7 months ago 22

சென்னை: சென்னையில் உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவித்து வருகின்றனர். சென்னையிலிருந்து புறப்படும் 5 விமானங்கள் மற்றும் வந்து சேர வேண்டிய 5 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா, புவனேஸ்வர், பெங்களூரு, திருவனந்தபுரம், சிலிகுரி செல்ல வேண்டிய 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.பெங்களூரு, திருவனந்தபுரம், புவனேஸ்வர், கொல்கத்தா, சிலிகுரியிலிருந்து சென்னை வரவேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. முன்னறிவிப்பு இன்றி ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்து பயணிக்க இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

The post சென்னையில் ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article