விசாரணைக்கு அழைத்து சென்றவரை தாக்கியது ஏன்? - மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கில் நீதிபதிகள் கேள்வி

4 hours ago 2

மதுரை / திருப்புவனம்: சந்​தேகத்​தின் அடிப்​படை​யில் விசா​ரணைக்கு அழைத்​துச் சென்ற மடப்​புரம் கோயில் காவலரை தாக்கியது ஏன்? அவர் என்ன தீவிர​வா​தியா என்று உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது. உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஏ.டி.மரியகிளாட் முன்பு அதி​முக வழக்​கறிஞர்​கள் மாரீஸ்​கு​மார், ராஜ​ராஜன், பாஜக வழக்கறிஞர் அருண் சுவாமி​நாதன் ஆகியோர் நேற்று காலை நேரில் ஆஜராகி, மடப்​புரம் காளி கோயில் காவலர் அஜித்​கு​மார் போலீஸ் காவலில் இறந்த விவ​காரம் தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரித்​து, உரிய உத்​தரவு பிறப்​பிக்க வேண்​டும் என்ற கோரிக்​கையை முன்​வைத்​தனர்.

அப்​போது அவர்​கள், “மடப்​புரம் காளி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண் ஒரு​வரின் காரில் இருந்த நகைகள் திருடப்​பட்​ட​தாக திருப்​புவனம் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. இதன்​பேரில் கோயில் காவல​ரான அஜித்​கு​மாரை போலீ​ஸார் விசா​ரணைக்கு அழைத்​துச் சென்​றனர். அப்​போது அவரை போலீ​ஸார் கடுமை​யாகத் தாக்​கிய​தில், அவர் உயிரிழந்தார்.

Read Entire Article