சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்

4 months ago 21

சென்னை,

சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கடைசி நேரத்தில் இயந்திர கோளாறு இருந்தது கண்டறியப்பட்டதால் 136 பேர் உயிர் தப்பினர். பிற்பகல் 1.30 மணியளவில், 128 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.

இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் தெரிவித்ததையடுத்து, விமானம் மீண்டும் நடைமேடைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பழுது சரிபார்க்கப்பட்டு, பிற்பகல் 3 மணியளவில் ஏர் இந்தியா விமானம் பயணிகளுடன் கோவைக்கு புறப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

அதைபோல சென்னையில் இருந்து டெல்லி புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு இயந்திர கோளாறு ஏற்பட்டது. கோளாறு சரிசெய்யப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.

Read Entire Article