மீனம்பாக்கம்: இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் காரணமாக, கடந்த 7ம் தேதி அதிகாலை முதல் இந்தியாவின் எல்லை பகுதி விமான நிலையங்களுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் சென்னையில் இருந்து எல்லை பகுதிகளான சண்டிகர், ஹிண்டன் விமான நிலையங்களுக்கு தினசரி நேரடி விமானங்களாக இயக்கப்பட்டு வந்த 4 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், கடந்த 7ம் தேதி அதிகாலை முதல் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஜம்மு, நகர் விமான நிலையங்களுக்கு டெல்லி வழியாக தினசரி இணைப்பு விமானங்களாக இயக்கப்பட்டு வந்த ஏர்இந்தியா, ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ், இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன.
பின்னர் இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதியில் போர் பதற்றம் ஓய்ந்து, இந்திய எல்லை பகுதியில் மூடப்பட்டிருந்த 32 விமான நிலையங்களும் கடந்த திங்கட்கிழமை முதல் மீண்டும் முழுமையாக செயல்படத் துவங்கின. இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் இருந்து இந்திய எல்லை பகுதியான ஹிண்டன் விமானநிலையத்துக்கு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை இன்று தொடங்கியது. அதேபோல் சென்னையில் இருந்து டெல்லி வழியாக இன்று காலை முதல் ஜம்மு, நகருக்கு மீண்டும் இணைப்பு விமான சேவைகள் துவங்கியது.
The post சென்னையில் இருந்து இன்று முதல் சண்டிகர், ஜம்முவுக்கு மீண்டும் விமான சேவை appeared first on Dinakaran.