சென்னையில் இருந்து அபுதாபி செல்லவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு

12 hours ago 2

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு நாடான அபுதாபிக்கு எத்தியார்ட் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. 168 பயணிகள், 10 விமான ஊழியர்கள் என 178 பேர் விமானத்தில் ஏறி விட்டனர். விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு விமானம் நடைமேடையில் இருந்து ஓடுபாதை நோக்கி செல்ல இருந்தபோது திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டு உள்ளதை விமானி கண்டுபிடித்தார். இதனால் விமானத்தை இயக்காமல் நிறுத்திவிட்டு விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

விமான என்ஜினீயர்கள் குழு விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் எந்திரக்கோளாறை சரி செய்ய முடியவில்லை. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்டுள்ள எந்திரக்கோளாறு சரி செய்யப்படாததால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் சென்னை நகரில் உள்ள ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். பழுது சரி செய்யப்பட்ட பிறகு அபுதாபிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது.

 

Read Entire Article