சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: விரைவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

1 week ago 5

சென்னை: ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோரயில் சோதனை ஓட்டம் பூந்தமல்லியில் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த தடங்களில் ஓட்டுநர் இல்லாத 138 ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொருரயிலிலும் 3 பெட்டிகள் இருக்கும். இதில் முதல் கட்டமாக, 36 ரயில்களை ரூ.1,215.92 கோடி மதிப்பில் தயாரித்து வழங்க, அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியது. இந்த வகையைச் சேர்ந்த முதல் மெட்ரோ ரயில் தயாரிக்கும் பணி ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் கடந்த பிப்.8-ம் தேதி தொடங்கியது. இப்பணிகள் செப்டம்பர் 22-ம் தேதி நிறைவடைந்தது. தொடர்ந்து, சோதனை தடத்துக்கு இந்த ரயில்மாற்றப்பட்டது.

Read Entire Article