![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/22/35244613-untitled-1.webp)
சென்னை,
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 25ம் தேதி இங்கிலாந்து - இந்தியா மோதும் 2வது டி20 போட்டி நடைபெற உள்ளது. இதனால் சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு இரவு 9.50க்கு புறப்படும் ரெயில் 10 மணிக்கும், இரவு 10.20க்கு புறப்படும் ரெயில் 10.30 மணிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு இரவு 10 மணிக்கு புறப்படும் ரெயில் சேப்பாக்கத்தில் 10 நிமிடம் நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.