ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இலங்கை அணி 257 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

2 hours ago 1

காலே,

இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அதே காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிசங்கா மற்றும் கர்ணாரத்னே களமிறங்கினர். இதில் நிசங்கா 11 ரன்களிலும், தனது கடைசி சர்வதேச போட்டியில் களமிறங்கிய கருணாரத்னே 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களில் சண்டிமால் மற்றும் குசல் மென்டிஸ் பொறுப்புடன் விளையாட அணி 200 ரன்களை கடந்தது. இருப்பினும் மற்ற முன்னணி வீரர்களான மேத்யூஸ் (1 ரன்), கமிந்து மென்டிஸ் (13 ரன்கள்), டி சில்வா (0) ஏமாற்றம் அளித்தனர். முதல் நாள் முடிவில் இலங்கை 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் அடித்துள்ளது. குசல் மென்டிஸ் 59 ரன்களுடனும், லஹிரு குமரா ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர் .

இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய குசல் மென்டிஸ் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் . பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் . இதனால் இலங்கை 257 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க், லியோன் , குனமென் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர் .

தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

Read Entire Article