சென்னையில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும் கனமழை

6 months ago 45

சென்னை,

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும், எனவும், குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கிண்டி, ஆலந்தூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், திருவான்மியூர், அடையாறு, எழும்பூர், வேப்பேரி, செண்ட்ரல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

முன்னதாக, சென்னையில் இரவு முழுவதும் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Read Entire Article