சென்னையில் அதிகாலையில் பரவலாக மழை

4 hours ago 2

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது .

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலையில் பரவலாக மழை பெய்தது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், வேப்பேரி, அமைந்தகரை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.   

Read Entire Article