'கியாரா அத்வானியின்' கேம் சேஞ்சர்' பிளாப் - ஊர்வசி ரவுத்தலா

3 hours ago 2

சென்னை,

இந்த ஆண்டு பொங்கலுக்கு தெலுங்கில் கியாரா அத்வானி, மீனாட்சி சவுத்ரி மற்றும் ஊர்வசி ரவுத்தேலா உள்ளிட்ட நடிகைகளின் படங்கள் வெளியாகின. நடிகை ஊர்வசி ரவுத்தேலா தமிழில் லெஜண்ட் சரவணா நடித்த தி லெஜண்ட் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், தமிழில் ஊர்வசி ரவுத்தேலாவுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் 'டாகு மகாராஜா'. இப்படம் வெளியாகி வெறும் 3 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை ஊர்வசி ரவுத்தலாவிடம் கேம் சேஞ்சரை விட டாகு மகாராஜ் சிறப்பாகச் செயல்படுவதைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில்,

'கியாரா அத்வானியின் கேம் சேஞ்சர் பிளாப் ஆகி இருக்கிறது. டாக்கு மகாராஜ் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி உள்ளது என்றால், அது என்னுடைய தவறில்லை' என்றார். இது தொடர்பான வீடியோ வெளியாகி ஊர்வசி ரவுத்தலா தற்போது விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறார்.

Read Entire Article