சென்னையில் 16,370 மெட்ரிக் டன் கட்டிட இடிபாட்டு கழிவுகள் அகற்றம்

19 hours ago 2

சென்னை: சென்னையில் 16,370 மெட்ரிக் டன் கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் 5,900 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. தண்டையார்பேட்டை உள்ளிட்ட 7 மண்டலங்கள் முழுவதும் சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்றும் வகையில் தூய்மைப் பணி மேயரால் கடந்த 7ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. 16ம் தேதி வரை 7 மண்டலங்களிலும், 2ம் கட்டமாக 17ம் தேதி முதல் திருவொற்றியூர் உள்ளிட்ட 8 மண்டலங்கள் உட்பட அனைத்து 15 மண்டலங்களிலும் தீவிரமாக கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 16,370.02 மெட்ரிக் டன் கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

The post சென்னையில் 16,370 மெட்ரிக் டன் கட்டிட இடிபாட்டு கழிவுகள் அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article