சென்னைக்கு வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் தடம் புரண்டு விபத்து

4 months ago 18

கொல்கத்தா,

சென்னை, எக்ஸ்பிரஸ் ரயில்மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ஜல்பைகுரி - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னை நோக்கி வரும் வழியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. ஒடிசா மாநிலம் பலாசோர் மாவட்டத்தில் உள்ள சோரோ ரயில் நிலையம் அருகே ரயில் வந்து கொண்டு இருந்த போது தடம் புரண்டது.

தண்டவாளத்தை ஒட்டி இருந்த எல்க்ட்ரிக் போஸ்டில் மோதிய பிறகு ரயில் தடம் புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை. ரயில்வே மூத்த அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

Read Entire Article