
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 77 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் டெல்லி 25 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 69 ரன்களும், மகேந்திரசிங் தோனி 30 ரன்களும் அடித்தனர். டெல்லி தரப்பில் விப்ராஜ் நிகாம் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கடந்த 2010-ம் ஆண்டுக்குப்பின் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னையை வீழ்த்தியதில்லை. இந்த 15 ஆண்டு கால தொடர் சோகத்திற்கு இந்த வெற்றியுடன் டெல்லி கேப்பிடல்ஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.