சென்னைக்கு எதிரான ஆட்டம்: பல சாதனைகள் படைத்த யுஸ்வேந்திர சாஹல்

1 day ago 5

சென்னை,

ஐ.பி.எல். தொடரில், சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாம் கர்ரன் 88 ரன்கள் அடித்தார். ஒரு கட்டத்தில் 200 ரன்களை எளிதில் தாண்டுவது போல் சென்ற ஸ்கோர் கடைசி 18 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்ததால் அந்த ஸ்கோரை அடைய முடியாமல் போய் விட்டது. பஞ்சாப் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 'ஹாட்ரிக்' உட்பட 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 72 ரன்கள் அடித்தார்.

இந்த ஆட்டத்தில் 'ஹாட்ரிக்' உட்பட 4 விக்கெட்டுகள் வீழ்த்திய சாஹல் சில சாதனைகள் படைத்துள்ளார். அவை விவரம் பின்வருமாறு:-

1. ஐ.பி.எல்.வரலாற்றில் அதிக முறை 4+ விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளராக சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. யுஸ்வேந்திர சாஹல் - 9 விக்கெட்டுகள்

2. சுனில் நரைன் - 8 விக்கெட்டுகள்

3. லசித் மலிங்கா - 7 விக்கெட்டுகள்

4. ரபாடா - 6 விக்கெட்டுகள்

2. ஒரே ஓவரில் அதிக முறை 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. சாஹல் - 2 முறை

2. அமித் மிஸ்ரா/ரசல் - ஒரு முறை

3. ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை சமன் செய்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. அமித் மிஸ்ரா - 3 முறை

2. யுவராஜ் சிங்/சாஹல் - 2 முறை

4. பஞ்சாப் அணிக்காக ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய 4-வது பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. யுவராஜ் சிங் - 2 முறை

2. அக்சர் படேல்/சாம் கரன்/சாஹல் - ஒரு முறை


Read Entire Article