சென்னை,
நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது, இலங்கை - திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 740 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 860 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 940 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும், அடுத்த 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.