மேஷம்
மேஷ ராசி அன்பர்களே!
மற்றவரிடம் இன்முகத்துடன் பேசி பழகுபவர்கள் நீங்கள் என்பதால் உங்களிடம் மற்றவர்கள் நட்பு பாராட்டுவர்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்கள், தங்கள் அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பொறுமையை கடைபிடிப்பது நல்லது.
வியாபாரிகள் அதிக முதல் போடுவதை தவிர்ப்பது நன்மையைத் தரும். இருக்கும் இருப்புகளை கழித்து விடுவது நல்லது. உடல் நலத்தில் உஷ்ணத்தால் பாதிக்கப்படுவீர்கள்.
குடும்ப தலைவிகளுக்கு தம்பதிகளிடையே அன்பு பலப்படும். இருவரும் இணைந்து குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். மாமியார் உறவுகள் மேம்படும்.
கலைஞர்களுக்கு பெரிய பேனர்களிலிருந்து அழைப்பு வந்து விடும். அவர்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது பலன் தரும்.
மாணவர்கள் தாங்கள் நினைத்த துறையில் படிக்க வேண்டுமென்றால் அதிக மதிப்பெண்களை பெற முயற்சி செய்யவும். விளையாட்டுப் போக்கை கைவிடுவது நல்லது.
பரிகாரம்
செவ்வாய்க் கிழமை அன்று கால பைரவருக்கு மிளகு, உப்பு சாத்துவது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே!
இயற்கையை ரசிப்பவர்கள் நீங்கள் என்பதால், மலைப் பிரதேச பயணங்களுக்குச் செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் மனநிம்மதி கிடைக்கும். வேலைப்பளு குறையும்.
வியாபாரிகளுக்கு வெளியூருக்குச் சென்று கொள்முதல் செய்யும் வாய்ப்பு கைகூடும். தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
குடும்ப தலைவிகளுக்கு தங்கள் வீட்டில் விருந்தினர்கள் வருகை உண்டாகும். அவர்களுடன் தங்கள் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். பிரிந்திருந்த தம்பதிகளின் கணவர் வீட்டார் மீண்டும் சேருவதற்கு பெரியவர்களின் மூலமாக சமரசத்திற்கு வருவார்கள். இளம் பெண்களுக்கு விரும்பியவாறு வரன் கிடைக்கும். கலைஞர்கள் கதைக்கு முக்கியத்துவம் தாருங்கள். ஒருமுறைக்கு இரு முறை யோசித்து ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.
மாணவ, மாணவிகள் படிப்பில் அக்கறை செலுத்துவர். ஆசிரியர் சொல்லை மதிப்பர். உடல் நலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். காலம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுகவும்.
பரிகாரம்
புதன் கிழமை அன்று பெருமாளுக்கு துளசி மாலையை அணிவிப்பது நல்லது.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே!
விடா முயற்சி வெற்றி தரும் என்பதை தாரக மந்திரமாக ஏற்று நடப்பவர் நீங்கள். அதன்படியே வெற்றியைக் குவிப்பவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவர்.
வியாபாரிகளுக்கு தங்களின் சிறு தொழிலின் முன்னேற்றத்திற்காக அரசு கடன் கிடைக்கும்.
குடும்பத் தலைவிகளுக்கு பணவரவில் பிரச்சினை இல்லை. தம்பதிகளிடையே அன்யோன்யம் கூடும். இருவரும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பாடுபடுவர். திருமணம் போன்ற சுபகாரியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு வரன் தட்டி தட்டி வந்து போகும்.
கலைஞர்களைப் பொருத்தவரைளுக்கு யாரிடமும் எடுத்தெறிந்து பேசவேண்டாம்.
மாணவர்கள் தாங்கள் நினைத்த மதிப்பெண்களை வகுப்புத் தேர்வில் பெற்று விடுவர். உடல் நல பாதிப்பு வந்து போகும்.
பரிகாரம்
திங்கள் கிழமை அன்று மகாலஷ்மிக்கு முல்லை மலர் மாலையை சாத்துவது நல்லது.
கடகம்
கடக ராசி அன்பர்களே!
நீங்கள் பிரச்சினைகளை நாசூக்காக கையாளுபவர். யார் பொல்லாப்பும் இன்றி காரியங்களை முடிப்பவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்கள், தங்கள் அலுவலத்தில் உள்ளவர்களிடம் தங்கள் குடும்ப விசயங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.
வியாபாரிகள் வங்கிக் கடன் பெற்று தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரம் செழிக்கும்.
குடும்பத் தலைவிகளுக்கு செலவுகள் அதிகரிக்கும். செலவினை குறைக்க சிக்கன நடவடிக்கையை எடுப்பர். வாழ்க்கை துணையுடன் சிறு சிறு வாக்குவாதம் வந்து போகும். கணவர் வீட்டார் தங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவர்.
கலைஞர்களுக்கு எதிர்பாலினரிடத்தில் கவனம் தேவை. கிசுகிசுக்களுக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.
மாணவ, மாணவிகள், அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவர். பிரிந்திருந்த நண்பர்கள் மீண்டும் இணைவர். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்
புதன் கிழமை அன்று ஸ்ரீநிவாசருக்கு பச்சை நிற ஆடையை சாத்துவது நல்லது.
கணித்தவர்:
திருமதி. N.ஞானரதம்
Cell 9381090389