சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

6 months ago 15

சென்னை,

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் இ-மெயிலுக்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன், மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#BREAKING || ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்மருத்துவ கல்லூரி நிர்வாகத்தின் இ-மெயிலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்புமோப்ப நாய் உதவியுடன், மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை… pic.twitter.com/4cRMd1SWEO

— Thanthi TV (@ThanthiTV) November 6, 2024
Read Entire Article