காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலி

3 hours ago 1

ஸ்ரீநகர்,

 

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் இன்று 4வது நாளாக தொடர் பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பாரமுல்லா மாட்டம் உரி பகுதியில் நர்கிஸ் பானு (வயது 45) என்ற பெண் உயிரிழந்தார். அதேபோல், பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஒரு நபர் உயிரிழந்தார். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். 

Read Entire Article