சென்னை வளசரவாக்கத்தில் கொள்ளை முயற்சி; பெண் டாக்டருக்கு கத்திக்குத்து

3 hours ago 3

சென்னை,

சென்னை வளசரவாக்கம் பிருந்தாவனம் நகர் பகுதியில் பெண் டாக்டர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர், ஆன்லைனில் மருந்து ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை கொடுக்க வந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

தனது குடும்பத்தினர் யாராவது மருந்தை ஆர்டர் செய்திருப்பார்கள் என நினைத்த பெண் டாக்டர், அந்த நபரிடம் மருந்தை தருமாறு கேட்டுள்ளார். அப்போது அந்த நபர் தனது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண் டாக்டரை குத்திவிட்டு, வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததால், பயத்தில் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண் டாக்டர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் அடிப்படையில் ராமாபுரம் பகுதியை சேர்ந்த 41 வயதான நாகமுத்து என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article