சென்னை: சென்னை, ராஜீவ் காந்தி சாலை (ஓ.எம்.ஆர்) டைடல் பார்க் சந்திப்பில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறை முகங்கள் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள ‘U’ வடிவ மேம்பாலம் மற்றும் நடைமேம்பாலம் ஆகியவற்றை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
டைடல் பார்க் ‘U’ வடிவ மேம்பாலம்
ராஜீவ் காந்தி சாலையில் (ஓ.எம்.ஆர்) டைடல் பார்க் சந்திப்பில் அமைந்துள்ள போக்குவரத்து சமிக்ஞையில் தற்போது வாகனங்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழலைக் கருத்தில் கொண்டு, டைடல் பார்க் சந்திப்பில் ரூ.27.50 கோடி செலவில் U’ வடிவ மேம்பாலமும், பாதசாரிகள் சாலையினை கடக்க ரூ.11.30 கோடி செலவில் திருவான்மியூர் MRTS இரயில் நிலையம் முதல் டைடல் பார்க் மேம்பாலம் வரையில் மேற்கு நிழற்சாலை சாலையின் (West Avenue Road) குறுக்காக ஒரு நடைமேம்பாலமும் கட்டப்பட்டுள்ளது.
தற்போது, பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ள டைடல் பார்க் மேம்பாலம் 510 மீட்டர் நீளமும் 8.50 மீட்டர் அகலமும் கொண்ட பாலம் ஆகும். . 12.50 மீ நீளமுள்ள 16 கண்களை கொண்ட. ராஜீவ் காந்தி சாலையில் ஒரு ஏறு சாய்தளம் , ஒரு இறங்கு சாய்தளம் மற்றும் தரமணி சி.எஸ்.ஐ. ஆர். சாலையில் ஒரு இறங்கு சாய்தளம் ஆகியவற்றை கொண்ட இந்தப் பாலத்தினை ஒட்டி ராஜீவ் காந்தி சாலை மற்றும் ,தரமணி சி.எஸ்.ஐ.ஆர் சாலைகளில் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
திருவான்மியூர் பகுதியில் இருந்து, மத்திய கைலாஷ் மற்றும் தரமணி சி.எஸ்.ஐ.ஆர் சாலையினை நோக்கி செல்லும் வாகனங்கள் டைடல் பார்க் சந்திப்பில் போக்குவரத்து சமிக்ஞைக்காக காத்திருக்காமல் இந்த பாலத்தின் வழியாக ஏறி அந்தந்த சாலைகளில் இறங்கி விரைவாக செல்ல இயலும்.
நடை மேம்பாலம்
திருவான்மியூர் MRTS இரயில் நிலையம் முதல் டைடல் பார்க் மேம்பாலம் வரையில் மேற்கு நிழற்சாலையின் (West Avenue Road) குறுக்கே, இரு முனைகளிலும் நகரும் படிக்கட்டுகளுடன் (Escalators), 5.25 மீ அகலமும் 155 மீ நீளமும் கொண்ட ஒரு புதிய நடைமேம்பாலம் (Foot Over Bridge) கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய நடை மேம்பாலம், திருவான்மியூர் MRTS இரயில் நிலையம் முன்பாக ராஜீவ் காந்தி சாலையின் குறுக்கே ஏற்கனவே உள்ள இரும்பு நடைமேம்பாலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் புதிய நடை மேம்பாலம் வழியாக மேற்கு நிழற்சாலை சாலையினை (West Avenue Road) பாதுகாப்பாக கடந்து திருவான்மியூர் MRTS நிலையம் சென்று வரவும், ராஜீவ் காந்தி சாலையினை கடந்து டைடல் பார்க் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு சிரமமின்றி சென்று வரவும் இயலும்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், மா.சுப்ரமணியம், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் J.M.H.ஹசன் மவுலானா, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர் டாக்டர். ஆர். செல்வராஜ், I.A.S, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் டி.பாஸ்கர பாண்டியன், I.A.S., சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே,I.A.S., நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் S.பழனிவேல், மற்றும் கண்காணிப்பு பொறியாளர் , கோட்டப் பொறியாளர் உள்ளிட்டஅரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post சென்னை ராஜீவ்காந்தி சாலையில் அமைக்கப்பட்டுள்ள U வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.