சென்னை,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 56 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.. நடப்பு தொடரில் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய சென்னை அணி முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த நிலையில், வரும் 12ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்க உள்ளது. காலை 10.15 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.