
சென்னை ,
சென்னை சென்ட்ரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பஹத்ஹிகோதி ரெயில் நிலையத்துக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. வருகிற மே 5ம் தேதியில் இருந்து இந்த புதிய ரெயில் சேவை தொடங்கப்படுகிறது, இந்த ரெயில் திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும்.
மறுமார்க்கமாக ராஜஸ்தானில் மாநிலம் பஹத்ஹிகோதியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. வருகிற மே 7ம் தேதியில் இருந்து இந்த புதிய ரெயில் சேவை தொடங்கப்படுகிறது, இந்த ரெயில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராஜஸ்தானில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும்.
பெட்டி அமைப்பு: 2- ஏசி இரண்டு அடுக்கு ரயில் பெட்டிகள், 4- ஏசி மூன்று அடுக்கு ரயில் பெட்டிகள், 4- ஏசி மூன்று அடுக்கு சிக்கன ரயில் பெட்டிகள், 6- ஸ்லீப்பர் வகுப்பு ரயில் பெட்டிகள், 4- பொது இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகள், 1- இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டி (திவ்யாங்கர் நட்பு) & 1- லக்கேஜ் கம் பிரேக் வேன்