
திருச்சி,
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 37) என்பவரின் உடைமைகளை சோதனை செய்ததில், அதில் அரியவகை பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர், தாய்லாந்தில் இருந்து இலங்கை வழியாக திருச்சிக்கு அரிய வகை பாம்பை கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த பாம்பை மீண்டும் வெளிநாட்டுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.