
திருப்பூர்,
மதுரை கோட்டத்தின் கொடைக்கானல் சாலை-வாடிப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருவதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை-நாகர்கோவில்(வண்டி எண்.16322) ரெயில் வருகிற 31-ந்தேதி வரை கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். இந்த ரெயில் கோவையில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.