சென்னை​யில் 1,302 பேருக்கு குண்டர் சட்டத்​தில் சிறை: ரவுடி ஒழிப்​பில் சிறப்பாக செயல்​பட்ட போலீ​ஸாருக்கு பாராட்டு

2 hours ago 3

சென்னை: சென்னையில் ரவுடி ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாரை நேரில் அழைத்து காவல் ஆணையர் பாராட்டினார். சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்தன. உச்ச கட்டமாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார். முதல் கட்டமாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இதையடுத்து, வீடு வீடாகச் சென்று ரவுடிகள் எச்சரிக்கப்பட்டதோடு, ஏ, ஏ பிளஸ், பி, சி என வகைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டனர்.

Read Entire Article