சென்னை மெட்ரோ ரெயில்கள் நாளை முதல் வழக்கம்போல் இயக்கம்

3 months ago 25

சென்னை,

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று நேற்று நள்ளிரவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றின் திசை வேகமாறுபாடு காரணமாக அது சென்னை- தெற்கு ஆந்திரா இடையே நாளை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை கடக்கும் போது அதிகனமழைபெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் நாளை, முதல் வார நாள் அட்டவணையின்படி வழக்கம்போல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் நாளை (17.10.2024) முதல் வழக்கம் போல் இயக்கப்படும்.

சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் நாளை (17.10.2024) முதல் வார நாள் அட்டவணையின் படி வழக்கம்போல் இயக்கப்படும். பச்சை வழித்தடத்தில் சென்டிரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாக செல்லும் மெட்ரோ ரெயில்சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படும்.

மெட்ரோ ரெயில் சேவை: காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். (முதல் மெட்ரோ ரெயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்குப் புறப்படும் மற்றும் கடைசி மெட்ரோ ரெயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 11 மணிக்கு புறப்படும்).

• காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை:

➢ பச்சை வழித்தடத்தில் சென்டிரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோரெயில்கள் இயக்கப்படும்.

➢ நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிடஇடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

➢ நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிடஇடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

• காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணிமுதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்

• இரவு 10 மணி முதல் 11 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article