சென்னை மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்கு ஒப்புதல்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

3 months ago 24

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளித்தற்காக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸடாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “கடந்த சந்திப்பில் நான் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. தமிழ்நாட்டு மக்களின் நெடுநாள் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்தைக் கூடிய விரைவில் நிறைவேற்றுவோம் என உறுதியாக நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Read Entire Article