சென்னை: மின்சார ரெயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

3 hours ago 2

சென்னை,

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 கல்லூரி மாணவர்கள் ரெயில் மோதியதில் உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரும் கல்லூரி இறுதி ஆண்டு படித்து வந்த மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் செல்போன் பேசிக்கொண்டே அலட்சியமாக தண்டவாளத்தை கடந்ததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக தகவல் அறிந்த ரெயில்வே போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Read Entire Article