சிங்கத்தை போன்ற மனிதன் - விராட் கோலிக்கு கம்பீர் புகழாரம்

5 hours ago 2

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.

மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு படைத்துள்ளார்.

அந்த சூழலில் தற்போது ஓய்வு பெற்றுள்ள விராட் கோலிக்கு பல முன்னாள் வீரர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர், விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து கம்பீர் தனது எக்ஸ் பக்கத்தில், "சிங்கத்தைப் போன்ற பேரார்வம் கொண்ட ஒரு மனிதன்! உங்களை மிஸ் பண்ணுவேன் சிக்ஸ்…." என்று பதிவிட்டுள்ளார்.

Read Entire Article