சென்னை மாரத்​தானில் கியான் பாபு முதலிடம்

4 months ago 14

சென்னை: சென்னை ரன்னர்ஸ், ஃபிரெஷ் ஒர்க்ஸ் இன்க் ஆகியவை சார்​பில் சென்னை மாரத்​தான் போட்​டி​யின் 13-வது சீசன் போட்டி நேற்று சென்னை​யில் நடத்​தப்​பட்​டது. முழு மாரத்​தான் (42.195 கி.மீ), பெர்ஃபெக்ட் 20 மைலர் - (32.186 கி.மீ), அரை மாரத்​தான் (21.097 கி.மீ) மற்றும் 10 கி.மீ. ஓட்டம் என நான்கு பிரிவு​களில் போட்​டிகள் நடத்​தப்​பட்டன. இதில் 25 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பங்கேற்​றனர்.

முழு மாரத்​தான் போட்​டி​யானது, நேப்​பியர் பாலத்​திலிருந்து தொடங்கி, மெரினா கடற்கரை பாதை வழியாக கலங்கரை விளக்​கத்தை சென்​றடைந்​தது. அதன்​பிறகு மத்திய கைலாஷ், டைடல் பார்க் ஆகிய​வற்​றைக் கடந்து கிழக்கு கடற்கரை சாலை​யில் முடிவடைந்​தது. போட்​டியை நேப்​பியர் பாலத்​தில் இந்திய கிராண்ட் மாஸ்​டரான ஆர்.வைஷாலி தொடங்கி வைத்​தார்.

Read Entire Article