சென்னை,
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளக்ஸ் பேனர்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி 15 மண்டலங்களிலும் இன்றிரவே பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி ஆணையர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்றும் பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது.