சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களை உயர்த்தும் திட்டம் நிறுத்தம்

10 hours ago 1

சென்னை,

சென்னை மாநகராட்சியில் தற்போது, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்போக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் என 15 மண்டலங்கள் உள்ளன.

இதற்கிடையே, சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மாற்றி அமைப்பது என தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ள நிலையில் மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கையை 15-ல் இருந்து 20ஆக உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

ஏற்கெனவே இருந்த 15 மண்டலங்களில் மணலி மண்டலம், திருவொற்றியூர் மற்றும் மாதவரம் மண்டலங்களுடன் சேர்க்கப்பட்டது. அதன்படி, 14 மண்டலங்கள் இருந்த நிலையில், தற்போது கொளத்தூர், வில்லிவாக்கம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, தியாகராய நகர், விருகம்பாக்கம், பெருங்குடி -சோழிங்கநல்லூர் ஆகிய 6 மண்டங்கள் புதிதாக சேர்க்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களின் எண்ணிக்கையை 20ஆக உயர்த்தும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. மணலி மண்டலத்தை பிரிக்க கவுன்சிலர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உள்ளாட்சி பிரதிநிதிகளின் காலம் முழுமையாக முடியாததற்கு முன்பே மண்டலத்தை பிரித்ததால் எதிர்ப்பு கிளம்பியதால், தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.  

Read Entire Article