சென்னை: உசிலம்பட்டி நகர்மனறத் தலைவர், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் 2 பேர், தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் என 4 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை பதவிநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவை 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இதன் விதிகளை மீறும் மேயர்கள், துணை மேயர்கள், மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மண்டலக்குழு தலைவர்கள், மன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அச்சட்டம் அதிகாரம் அளிக்கிறது. இதன்படி விதிகளை மீறி செயல்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் 4 பேரின் பதவிகளை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.