சென்னை: சென்னை அமைந்தகரையில் நேற்றிரவு மாநகரப் பேருந்து நடத்துநர் ஜெகன் பேருந்தில் இருந்து கீழே தள்ளப்பட்டு உயிரிழந்த வழக்கில் பேருந்தில் பயணித்த கோவிந்தன் மீது கொலை உள்பட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார். ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோதலில் காயமடைந்த கோவிந்தன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். எம்.கே.பி நகர் முதல் கோயம்பேடு செல்லும் 46G பேருந்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. நடத்துநருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
எம்கேபி நகர் – கோயம்பேடு மார்க்கமாக இயக்கப்படும் மாநகர பேருந்து 46Gல் நடத்துனராக பணிபுரிபவர் ஜெகன்குமார்(52). இவர் நேற்று வழக்கம்போல பணியில் இருந்தபொழுது அரும்பாக்கம் அருகே கோவிந்தன்(65) என்பவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பேருந்தில் ஏறியுள்ளார். அவரிடம் அனைவருக்கும் பயணச்சீட்டு எடுக்குமாறு நடத்துடர் கேட்டுள்ளார். பெண்களுக்கு இலவசம் பயணம் என அரசு அறிவித்திருக்கும்போது, தனது மனைவிக்கும் ஏன் டிக்கெட் வாங்க வேண்டும் என கோவிந்தன் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், கைகலப்பாகி கீழே விழுந்த நடத்துநர் ஜெகன் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, பயணி கோவிந்தனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சென்னை மாநகர பேருந்து நடத்துநர் உயிரிழந்த விவகாரம்; கைதான பயணி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு! appeared first on Dinakaran.