சென்னை போரூரில் மழை காரணமாக மின் கம்பத்தில் தீ: பட்டாசு வெடிப்பது போல் வெடித்ததால் பரபரப்பு

3 months ago 18

சென்னை: சென்னை போரூரில் மழை காரணமாக மின் கம்பத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பட்டாசு வெடிப்பது போல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை போரூர் அருகே வானகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை புறநகர் பகுதியில் நேற்று மாலை முதலே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக போரூர், மதுரவாயல், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக போரூர் வானகரத்தில் உள்ள மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டு தீ பொறி பரவியது. தீயானது பட்டாசு வெடிப்பது போல் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பீதி அடைந்தனர். இந்த தீ விபத்தானது 10 நிமிடமாக இருந்தது. உடனடியாக தகவல் அறிந்து மின் வாரிய துறையினர் மின் இணைப்பை துண்டித்தனர்.

இந்த தீ விபத்து காரணமாக வானகரம் ஊராட்சியில் 5000 மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. உடனடியாக தீர்வுகாண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதன் காரணமாக மின் வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை சரி செய்வதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

The post சென்னை போரூரில் மழை காரணமாக மின் கம்பத்தில் தீ: பட்டாசு வெடிப்பது போல் வெடித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article