
அண்டை மாநிலமான ஆந்திராவில் வழங்குவதைப்போல, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், புதியதாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும், தகுதியான அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்பேடு பஸ் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

கலைந்து செல்ல மறுத்து தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர். கோட்டையை நோக்கி செல்ல முயன்ற மாற்றுத் திறனாளிகள் கோயம்பேடு பஸ் நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
சென்னை சேப்பாக்கம் எழிழகத்தில் இன்று நடைபெற இருந்த கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வெளி மாவட்டங்களில் இருந்து வந்த மாற்றுத்திறனாளிகளை பஸ் நிலையங்களில் வைத்து போலீசார் கைது செய்தனர்.