சென்னை பெருநகர காவல்துறையில் காவல் கரங்கள் உதவி மையம், கடந்த 21.04.2021 அன்று துவங்கப்பட்டு 9444717100 என்ற அழைப்பு எண் மூலம் ஆதரவற்ற உதவிகள் நாடும், விலாச மற்ற நபர்களின் உதவிக்காக ஆரம்பிக்கப்பட்டு, சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட, மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை NGO மற்றும் தன்னார்வலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்டு அரசு, தன்னார்வ காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு “மனிதம் போற்றுவோம் மனிதநேயம் காப்போம்” என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சேவை பணி ஆற்றி வருகிறது. உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடல்களை தன்னார்வலர்களின் உதவியுடன் முறையான செயல்முறைகள் முடிக்கப்பட்டு, இறுதிசடங்குகளுடன் கண்ணியத்துடன் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுவருகிறது. உணவு வழங்கி வரும் அமைப்புகள் மூலம் உணவுகள் சேகரிக்கப்பட்டு தேவையுள்ள காப்பகங்களுக்கு வழங்கியும் வருகிறது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் திரு.கபில்குமார் சி. சரட்கர், இ.கா.ப, அவர்கள் தலைமையில் 08.03.2025 அன்று உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை, வேப்பேரியில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற வீடற்றவர்களுக்கான முதியோர் காப்பகத்தில் (ICWO) இருந்து வரும் வயது முதிர்ந்த பெண்களுக்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, காப்பகத்தில் உள்ள 30 முதியோர்களுக்கு புடவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கேக் வெட்டி, முதியோர்களுக்கு தேவையானவைகளை வழங்கி மகளிர் தினம் முதியோர்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல் கரங்கள் பொறுப்பு உதவி ஆணையாளர் முனைவர் திரு.M.S.பாஸ்கர், காவல் ஆய்வாளர் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து கலந்து கொண்டனர்.
இதுவரை சென்னை பெருநகர காவல் துறையின் காவல் கரங்கள் உதவி மையம் மூலம் 8035 வீடற்ற, ஆதரவற்ற நிலையில் இருந்த உதவி நாடிய மக்கள் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் 5484 பேர் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டும், 1260 நபர்கள் காணாமல் தவித்த குடும்பத்துடன் மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டும். 943 மனநலம் குன்றியவர்களை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் 400க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டும், பல்வேறு உடல் நலகுறைவு காரணமாக பாதிக்கப்பட்ட 347 நபர்கள் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றும் தன்னார்வலர்கள் மூலம் உதவி செய்யப்பட்டும் வருகிறார்கள். காவல் கரங்கள் உணவு உதவி வாகனம் மூலம் இதுவரை 2,06119 உணவு பாக்கெட்டுகள் சேகரிக்கப்பட்டு. காப்பகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உரிமைகோரப்படாத 4933 இறந்த உடல்கள் உரிய விசாரணைக்குப்பின தன்னார்வலர்களின் உதவியுடன் உரிய இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்தும் காவல் கரங்கள் உதவிமையம் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. வீடற்ற, ஆதரவற்ற, நோய்வாய்ப்பட்டு உதவிகள் நாடும் நபர்களுக்காக இயங்கி வரும் சென்னை பெருநகர காவல் கரங்கள் உதவி எண்.9444717100-ஐ தொடர்பு கொண்டு உதவிடவும், பயன்பெறவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
The post சென்னை பெருநகர காவல்துறை காவல் கரங்கள் சார்பாக முதியோர் காப்பகத்தில் மூத்த குடிமக்களுடன் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. appeared first on Dinakaran.