தர்மேந்திர பிரதானுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் - நடந்தது என்ன?

3 hours ago 2

சென்னை: தமிழக எம்.பி.க்களை ‘அநாகரிகமானவர்கள்’ என நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சென்னை மயிலாப்பூரில் எம்எல்ஏ மயிலை வேலு தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேப்பாக்கம் பகுதி திமுக சார்பில் சிந்தாதிரிப்பேட்டையிலும், தொடர்ந்து ஆழ்வார்ப்பேட்டை, சைதாப்பேட்டையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தர்மேந்திர பிரதானின் உருவபொம்மையை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Read Entire Article